Tuesday, July 22, 2008

நேர்க்காணல்

நேர்க்காணல் செவ்வியல் மொழி என்பது செம்மையான பழமை வாய்ந்த இலக்கியங்களை கொண்டிருக்கும் மொழி - "டாக்டர் வா.செ.குழந்தைசாமி"
டாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளயம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தியாவிலும், பின்னர் ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும் உயர்கல்வி பயின்றவர்...

மேலும் படிக்க

http://www.bhashaindia.com/Patrons/SuccessStories/default.aspx?lang=ta

திரு. கு. கல்யாணசுந்தரம்
தமிழ் ‌டிஜிட்டல் ‌‌‌நூலக துறைக்கு பிள்ளையார் சு‌ழி ‌‌‌‌போட்டவர். இணையத்தில் புகழ் பெற்ற மதுரைத்திட்டத்தின் முன்னோ‌டி. ‌‌சென்னை மாநகரில் ஆரம்பக் கல்வி முதல் கல்லூரி படிப்புவரை பயின்றவர். சென்னை லயோலா கல்லூரியில்...

மேலும் படிக்க
"தமிழ் இணையப் பல்கலைக்கழக இயக்குனர்"
திரு ப.அர. நக்கீரன்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இப்போது அண்ணா பல்கலைக் கழகம் என்றழைக்கப்படும் கிண்டி பொறியியல்...

மேலும் படிக்க
"பன்மொழித் தொழில்நுட்பங்களின் சங்கமம் - பாஷா இந்தியா"
"திரு. முத்து நெடுமாறன் ஓர் சந்திப்பு"
இவரைப் பற்றி சில குறிப்புகள்‌‌
1985 – மின்னியல் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம்


மேலும் படிக்க
'கணியத் தமிழ் சாஃப்ட்வேர்' பிரைவேட் லிமிடெட்டின் தலைவர்!
"சி.கபிலன் ஓர் சந்திப்பு"
சி.கபிலன் கணியத் தமிழ் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்டின் தலைவர் ஆவார். இவர் தற்போது கணிப்பொறியில் ஆங்கிலத்தைப் போல தமிழையும்...


மேலும் படிக்க
தமிழ் தகவல் தொழில்நுட்பத்தை பொருளாதார வளமாக்க வேண்டும்!
"மா. ஆண்டோ பீட்டர் ஓர் சந்திப்பு"
தமிழ்க்கணினி உலகில் சுமார் 17 வருட அனுபவம் உடையவர். பிரபலமான எழுத்தாளர். சென்னையில் சாஃப்ட்வியூ என்ற கணினி நிறுவனம் வாயிலாக தமிழ்...


மேலும் படிக்க
"டாக்டர் ஜெயதேவன் ஓர் சந்திப்பு"
சென்னை பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக பணியாற்றும் டாக்டர். ஜெயதேவன் அவர்கள் திருச்சிராப்பள்ளியில் தன் பள்ளிப்படிப்பையும், தேசியக் கல்லூயியில் பி.யு.சியும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்...

மேலும் படிக்க
"திரு. விஸ்வநாதனுடன் ஓர் சந்திப்பு"
எஸ்ஆர்வி கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான திரு.விஸ்வநாதன் தமிழ் கணினிப்பணியை சாதாரண மக்களால் அளவிடமுடியாத உயரத்திற்கு கொண்டு சென்றவர். விஸ்வநாதன் உருவாக்கிய மென்பொருளை அவரே அறிமுகப்படுத்தி...

மேலும் படிக்க
"டாக்டர். வெ.சங்கரநாராயணன் நேர்காணல்"
அண்ணாப் பல்கலைக்கழகத்தின் இராமானுஜம் கம்ப்யூட்டர் மையத்தின் இயக்குநராக பணியாற்றியவர் நெல்லை மண்ணில் பிறந்த பொறியியல் மாணவரான டாக்டர். சங்கரநாராயணன், ஆற்றல் திட்ட கல்வியில் முனைவர் பட்டம் பெற்றவர்...

மேலும் படிக்க
"தமிழகத்தில் தமிழ்க் கணினித்துறையில் மூத்தவர்"
- டாக்டா.வி.கிருஷ்ணமூர்த்தி
தமிழகத்தில் தமிழ்க் கணினித்துறையில் மூத்தவர், அண்ணாப் பல்கலைக்கழக பேராசிரியர், தமிழ் மென்பொருள் வடிவமைப்பாளர், ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் என பல துறையில் 35 ஆண்டு கால அனுபவம் பெற்றவர் டாக்டர்.வி.கிருஷ்ணமூர்த்தி...

மேலும் படிக்க
"எழுத்தறிவு பெற்ற ஒவ்வொரு தமிழனும் தகவல் தொழிற்நுட்பத் துறை‌ ‌அறிவை பெறவேண்டும்"
- திரு த.அய்யம்பெருமாள்
உலக ‌‌‌‌அளவில் வன்‌பொருள் மற்றும் மென்பொருள் விற்பனை, சேவை மற்றும் தயா‌ரிப்பு மையங்கள், வ‌‌‌‌டிவமைப்பு நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள் என தகவல் ‌தொழிற்நுட்பத்துறையில் பல்வேறு வகையான நிறுவனத் ‌‌தொழில்கள் உள்ளன...

மேலும் படிக்க
"பழந்தமிழ் செம்மொழி வளர்ச்சியை நோக்கி..."
- டாக்டர் உதய நாராயண சிங்
இந்திய அரசின் தமிழ் செம்மொழி அறிவிப்பால் உலகத்தமிழ் சமுதாயமே பெருமைப்படுகிறதென கூறலாம். இந்த தமிழ் செம்மொழி வளர்ச்சிக்கான பொறுப்பை மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்திடம்...

மேலும் படிக்க
"கலைச்சொல்லாக்கம் மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய ஒன்றாகும்"
- மு. சிவலிங்கம்
கணினி பற்றிய தகவல்களை எளிமையாக மக்களிடம் எடுத்து செல்வதற்கு ஒரு வழி, அந்த தகவல்கள் அனைத்தும் அவரவருடைய தாய்மொழியில் இருக்க வேண்டும். தமிழ் மொழியைப் பொருத்தவரையில் இந்தப் பணியை பலர் செய்து...

மேலும் படிக்க
"கடைக்கோடி தமிழனுக்கும் கணித்ததமிழ்" - துரைப்பாண்டி
கிராமத்து மண்ணை சுவைத்தவனே மொழியுணர்வையும் நன்றாக சுவைத்திருப்பான் என்பதற்கு உதாரணம் துரைப்பாண்டி. திண்டுக்கல்லில் சிறிய அளவில் தமிழ் மென்பொருள் தயாரிப்பு மையத்தை துவங்கிய இவர், தற்போது சென்னை...

மேலும் படிக்க
"கணினிவழி மொழியியல் தொழில்நுட்பம்" - டாக்டர். தெய்வ சுந்தரம்
தாய்மொழி மட்டுமே கற்று கணினியைப் பார்த்து அஞ்சுபவர்களை கணினியின் பக்கம் திருப்புவதற்காக, தாய்மொழி வழியாக கணினியைக் கற்றுத்தர வேண்டும் என்ற முயற்சியில் மொழியியல் தொடர்பான மென்பொருட்களை...

மேலும் படிக்க
"தமிழகத்தின் அனைத்து கணினிகளிலும் தமிழ் மென்பொருள் தேவை"
- டாக்டர். மு.ஆனந்த கிருஷ்ணன்
வாணியம்பாடியில் பிறந்த கல்விச்சிகரமே நம் டாக்டர். மு.ஆனந்த கிருஷ்ணன் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் தமிழ்வழிக் கல்வி பெற்றவர். பள்ளி பருவத்தில் கணிதவியல் ஆர்வமுள்ள இவர் சாலைப்பொறியியலில் பட்டம் பெற்றவர்...

மேலும் படிக்க
"தமிழின் முக்கிய எழுத்தாளரும், ஆசிரியரும், தமிழில் யூனிகோட் குறியீடைப் பயன்படுத்தி வெளிவரும் முதல் இணைய இதழ் "திசைகள்" ஆசிரியர்...."
- திரு. மாலன் V நாராயணன்
இந்திய மொழிக் கணினி மேம்பாட்டில் தீவிரமான ஈடுபாடு கொண்டுள்ள மாலன் உலகளாவிய இணையத் தமிழ் அமைப்பான "உத்தமம்" (INFITT) வளர்ச்சியிலும், மைக்ரோசாப்ட் ஆபிஸ் தமிழ் மேம்பாட்டிலும் பங்கெடுத்து வருகிறார்...

மேலும் படிக்க

மா. ஆண்டோ பீட்டர் நேர்காணல்

மா. ஆண்டோ பீட்டர் நேர்காணல்
தமிழ் தகவல் தொழில்நுட்பத்தை பொருளாதார வளமாக்க வேண்டும்!
தமிழ்க்கணினி உலகில் சுமார் 17 வருட அனுபவம் உடையவர். பிரபலமான எழுத்தாளர். சென்னையில் சாஃப்ட்வியூ என்ற கணினி நிறுவனம் வாயிலாக தமிழ் எழுத்துருக்கள், மல்டிமீடியா சிடிக்கள், அனிமேஷன் பயிற்சிகள் மற்றும் தமிழ் மென்பொருள் தயாரிப்பு பணிகளை செய்து வருகிறார். சுறுசுறுப்பு மற்றும் திட்டமிடுதல் ஆற்றலால் வலிமையாக தமிழ்க்கணினி துறைக்கு பணியாற்றி வருகிறார். பாஷாஇந்தியா இணைய தளத்திற்கு அவரை நேர்காணல் செய்த போது:
தங்களுக்கு தமிழ் தகவல் தொழிற்நுட்பத் துறையில் புத்தகங்கள் படைக்க வேண்டுமென எவ்வாறு உதித்தது?
ஆண்டோ: பல பத்திரிகைகளிலும், நாளிதழ்களிலும் கணினி கட்டுரைகள் பல படைத்துள்ளேன், தொடர் கட்டுரைகள் கூட பல எழுதியுள்ளேன். பாஷா இந்தியா தமிழ்தளத்திலும் பல கட்டுரைகள் எழுதியுள்ளேன். அச்சுமீடியா மூலமாக பாமரருக்கும் தகவல்களை அளிக்க முடியும், புரிய வைக்க முடியும், எளிமைப் படுத்த முடியும் என்பதை உணர்ந்தேன். பட்டி தொட்டியெங்கும் தகவல் தொழிற்நுட்ப செய்திகள் தேவையென்ற அவசியம் என் மனதிற்கு பட்டதால் எழுத்துப்பணியில் ஈடுபட்டேன், இதுவரை சுமார் 14 நூல்கள் தமிழில் எழுதியுள்ளேன். இவற்றில் பல நூல்கள் மறுபதிப்பு வரை படைக்கப்பட்டு புகழடைந்துள்ளது. நான் எழுதிய 'தமிழும் கணிப்பொறியும்' என்ற நூல் 2002 ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த நூல் விருதைப் பெற்றுள்ளது.
உங்கள் அலுவலக படைப்பில் www.tamilcinema.com என்ற புகழ்பெற்ற படைப்பின் சாதனை என்ன?
ஆண்டோ: உலகில் வெளியான முதல் தமிழ் இணைய இதழ் என்ற பெருமை தமிழ் சினிமாவிற்கு உண்டு. 1997 ஆண்டு தொடங்கப்பட்டு, இன்றுவரை இலவச டவுண்ட் தமிழ் எழுத்துரு அளிக்கப்பட்டு, முழுத்தளமும் தமிழிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகில் தமிழர்கள் வாழும் அனைத்து திசைகளின் மூலமாக ஒரு நாளைக்கு சுமார் 7 லட்சம் வாசகர்கள் வரை இவ்விணையத்திற்கு வருகை தருகிறார்கள்.
தமிழ் எழுத்துருக்கள் தயாரிப்பில் உங்கள் நிறுவனத்தின் பங்கு என்னென்ன?
ஆண்டோ: தமிழ் எழுத்துருக்கள் பணியில் பல ஆண்டுகளாக எங்கள் நிறுவனம் ஈடுபட்டுவருகிறது. தமிழில் 450 எழுத்துருக்களும், இந்தியில் 60 எழுத்துருக்களும், மலையாளத்தில் 38 எழுத்துருக்களும், தெலுங்கில் 50 எழுத்துருக்களும், கன்னடத்தில் 32 எழுத்துருக்களும் எங்கள் நிறுவனம் தயாரித்துள்ளது. எவரெனும் பிரத்யோகமாக எழுத்துரு தேவையென அணுகினாலும் தயாரித்து அளிக்கிறோம். இவைத்தவிர பார்டர்ஸ், பிரேம்கள், கிளிப்ஆர்ட்ஸ், சிம்பல்ஸ் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறோம். ஆகையால் தான் அச்சகம் மற்றும் பதிப்பகத்துறையில் எங்கள் நிறுவனம் மேலோங்கியுள்ளது.
தமிழ் மல்டிமீடியா சிடிகளின் வணிகம் உலக அரங்கில் எந்த அளவில் உள்ளது?
ஆண்டோ: பல புதிய மல்டிமீடியா நிறுவனங்களும், கணினி நிறுவனங்களும் கூட மொழி சார்ந்த மல்டிமீடியா சிடிகளை வெளியிடத் துவங்கியுள்ளனர். இதுசார்ந்த துறை காலியாகவேவுள்ளதென கூறலாம். தமிழில் திருக்குறள், ஆத்திசூடி, தமிழ்ப்பெயர்கள். தட்டச்சு துணைவன், புதிய ஆத்திச்சூடி, குழந்தைப்பாடல்கள் மற்றும் கதைகள், ஆகிய சிடிக்களை வெளிட்டுள்ளோம். தரமான அனிமேஷனுடன் தமிழில் சிடிக்களை எங்கள் நிறுவனம் வெளியிடுவதால் நன்மதிப்பு பெருகியுள்ளது. இவை தவிர தமிழ் மொழியை கற்பிப்பதற்காக தமிழ் கற்போம் மற்றும் தமிழ் இலக்கணம் ஆகிய சிடிக்களையும் வெளியுட்டுள்ளோம். மேலும் பல தமிழ் அனிமேஷன் சிடிக்கள் எங்கள் நிறுவனத்திலிருந்து வெளிவரவுள்ளது. தமிழ் மல்டிமீடியா சிடிக்கள் கணினி வணிக மையங்களின்றி பேன்ஸி ஸ்டோர்ஸ், முதல் புத்தகக்கடை வரை அனைத்து இடங்களிலும் அதனுடைய மார்க்கெட் பரவியுள்ளது.
வணிகத்திற்கு அப்பாற்பட்டு தமிழ்க்கணினி சேவையில் தங்களை எவ்வாறு ஈடுபடுத்த முடிகிறது?
ஆண்டோ: தகவல் தொழிற்நுட்பத்துறையை கிராமம் வரை கொண்டு செல்ல வேண்டிய என்னுடைய கனவு. என்னுடைய ஆர்வங்கள் மற்றும் அலுவலகப்பணிகள் அனைத்தும் தமிழ் சார்ந்தே இருப்பது என்னுடைய கனவினை வண்ணமயமாக மாற்றுகிறது. கணித்தமிழ்ச்சங்கம், தமிழ் மரபு அறக்கட்டளை மற்றும் உத்தமம் ஆகிய தமிழ்க் கணினி இயக்கங்களில் என்னை ஈடுபடுத்தியுள்ளேன். நான் பங்கெற்கும் பிற அமைப்புகளிலும் தமிழ்க்கணினிக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்துகிறேன். மொத்தத்தில் என் தாய்மொழி தமிழ் பொருளாதார ரீதியாக வெற்றியடைய பலவகைகளில் முயற்சி எடுத்து வருகிறேன்.

மின்மடல் இதழ்கள்

Tuesday, July 20, 2004
மின்மடல் இதழ்கள்
[ஜூலை 20, 2004 அன்று நான் எழுதிய "மின்மடல் இதழ் வலைப்பதிவையும் குழுமத்தையும் விட மேலான வடிவமா?" என்கிற பதிவு காணாமல் போய்விட்டது. ப்ளாக்ஸ்பாட்டில் இது அவ்வப்போது நடக்கிறது. எனவே, என்னுடைய கோப்பில் இருந்து அதை மீண்டும் ஏற்றியிருக்கிறேன். 11 நண்பர்கள் அதற்குக் கருத்து சொல்லியிருந்தனர். அந்தக் கருத்துகள் ஹாலோஸ்கேனில் அப்படியே இருக்கின்றன. நீக்கப்படவில்லை. அவற்றை இந்தப் புதிய பதிவுடன் எப்படி இணைப்பது என்பது குறித்து யாரும் உதவினால் நன்றிகள்.]

திண்ணை இணைய இதழில் வெங்கடேஷின் "நேசமுடன்" - அறிவுபூர்வமான தளம்: அக்கறையான தேடல் என்னும் தலைப்பில் ரமா என்பவர் எழுதியிருக்கிறார். சி·பி வெங்கடேஷ் நடத்தி வரும் நேசமுடன் என்கிற வாராந்தர மின்மடல் இதழைப் பற்றி அந்தக் கட்டுரையில் ரமா எழுதியிருக்கிறார். சி·பி வெங்கடேஷின் எழுத்துகள் ரமாவுக்குப் பிடிக்கும் போலிருக்கிறது. ம.வெ. சிவகுமார் (அவர் சரியான பெயர் ம.வே.சிவகுமார்) என்கிற எழுத்தாளரைக் கூட இப்போது வெங்கடேஷின் நேசமுடன் படித்தபின்தான் அறிந்ததாகச் சொல்கிறார் ரமா. இதிலிருந்தே வெங்கடேஷின் நேசமுடன் மின்மடல் இதழ் ரமாவுக்கு மிகவும் பிடித்துப் போனதற்கான காரணங்களை அறிந்துவிட முடிகிறது. இப்படிப்பட்ட வாசகர்களுக்கு வெங்கடேஷின் நேசமுடன் இதழ் இலக்கியச் சேவை புரிந்து வருவதில் நமக்கும் மகிழ்ச்சியே. நேசமுடன் இதழில் வெளியான பல கட்டுரைகளை நானும் ரசித்திருக்கிறேன். மின்மடல் இதழ் என்கிற வடிவத்தை வெங்கடேஷ் தேர்ந்தெடுத்தது அவர் வசதிக்காக என்றும் உணர்ந்திருக்கிறேன். ஆனால், வெங்கடேஷ் நடத்துகிற நேசமுடன் என்கிற மின்மடல் இதழ் உலகின் சாலச் சிறந்த இதழியல் வடிவம் என்று ரமா நம்புகிறார் போலும். ரமாவின் நம்பிக்கை அவருக்கு. இதிலும் நமக்குப் பிரச்னை இல்லை. ஆனால், ஒன்றை உயர்த்துவதாக நினைத்துக் கொண்டு இன்னொன்றைத் தாழ்த்துவதே நம்மில் பெரும்பாலோர் அறிந்தும் செய்வது. அதையே ரமாவும் செய்திருக்கிறார். வலைப்பதிவு, மின்குழுமம் ஆகிய வடிவங்களை விட மின்மடல் இதழ் என்கிற வடிவம் மேலானது என்பதை வெங்கடேஷின் மேற்கோள்களுடன் சொல்ல முயல்கிறார். அதனால்தான் நாம் மூக்கை நுழைக்க வேண்டியிருக்கிறது.

இணைய உலகின் முதல் கருத்துப் பரிமாற்ற வடிவம் மின்மடல்கள். அவை பரிணாம வளர்ச்சியடைந்து இணைய சஞ்சிகைகளாகவும், மின்குழுமங்களாகவும் இப்போது வலைப்பதிவுகளாகவும் செழித்திருக்கின்றன. நாளை இன்னொரு புதிய வடிவம் வரக்கூடும். வரும். எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் காலத்துக்கேற்ற வடிவங்களைத் தங்கள் சிந்தனைகளை முன்வைக்கப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை. அந்த வடிவில், மின்மடல்கள் (மின்மடல் இதழ்கள் இதில் அடக்கம்), இணைய சஞ்சிகைகள், மின் குழுமங்கள், வலைப்பதிவுகள் என்கிற வரிசை பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் அமைந்த வரிசை.

இந்த வரிசையைப் பார்த்தோமேயானால், முதலில் வந்த மின்மடல் இதழ்கள் ஒருவழிப் பாதை மாதிரி. எதிர்க் கருத்தையும் விமர்சனத்தையும் விரும்பாத எந்த எழுத்தாளரும் இந்த கற்கால வடிவத்தை ஆர்வத்துடன் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, நேசமுடன் மின்மடல் இதழ், இதுவரை 14 இதழ்கள் வந்திருக்கின்றன என்று ரமா எழுதுகிறார். முந்தைய இதழ்களைப் பற்றிய வாசகர் கருத்தோ, எதிர்வினையோ பிரசுரமானதாக எனக்கு நினைவில்லை. ஆனால், அவ்வப்போது நேசமுடனைப் பாராட்டி வாசகர் கடிதங்கள் பிரசுரமாகியிருப்பதாக ரமா எழுதியிருக்கிறார். என் நினைவு தவறென்று தள்ளி ரமா சொல்வதை நான் நம்புகிறேன். பாராட்டுகளைத் தவிர எத்தனை விமர்சனங்களும் எதிர்வினைகளும் நேசமுடன் இதழுக்கு வந்தன என்று இன்றைக்கு யாருக்கும் தெரியாது. வெங்கடேஷைத் தவிர. இதுதான் மின்மடல் இதழ்களின் பெருங்குறை. மின்மடல் இதழை நடத்துபவர் விரும்பினால் மட்டுமே எதிர்க்கருத்துகளை இடம்பெறச் செய்ய இயலும். இல்லையென்றால் பாராட்டுகளை மட்டுமே போட்டு தோரணம் கட்டி மகிழ்ந்து கொள்ள முடியும். இதனால் வாசகர்கள் முன்வைக்கிற ஆக்கபூர்வமான எதிர்வினைகள்கூட வெளியே தெரியாமல் போய்விடுகிற வாய்ப்பிருக்கிறது. எழுத்தாளரின் கருத்துகளை மட்டும் வாசகரின் பார்வைக்கு முன்வைத்து வாசகரின் கருத்தென்ன என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் போகிற வாய்ப்பை மின்மடல் இதழ்கள் தருகின்றன. அதனாலேயே அவற்றை ஒருவழிப்பாதை என்கிறேன். ஜெயகாந்தன், சா.கந்தசாமி போன்ற எழுத்தாளர்களுக்கு விமர்சகர்கள் மீதும் அவர்கள் முன்வைக்கிற விமர்சனங்கள் மீதும் நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால், வாசகர்களையும் அவர்களின் கருத்துகளையும் பொருட்படுத்திப் படித்தவர்களிலும் பதில் சொன்னவர்களிலும் அவர்களைப் போன்ற எழுத்தாளர்கள் அடங்குவர் என்பதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

மின்மடல் இதழ்களைவிட ஓரளவுக்கு இணைய சஞ்சிகைகள் மேல். ஏனென்றால், இணைய சஞ்சிகைகள் வாசகர்களின் எல்லாக் கடிதங்களையும் பிரசுரிப்பதில்லை என்று எடுத்துக் கொண்டோம் என்றாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பாராட்டுகளையும் கடிதங்களையும் எதிர்வினைகளையுமாவது பிரசுரிக்கின்றன என்று ஆறுதல்பட்டுக் கொள்ள முடியும். தமிழின் இணைய சஞ்சிகைகள் பொதுவாக எல்லாக் கடிதங்களையும் அப்படியே பிரசுரித்து விடுவது இந்த விதத்தில் நல்ல விஷயமும் கூட. ஆனாலும், இணைய சஞ்சிகைகளிலும் கருத்துத் தணிக்கைக்கான வாய்ப்புகள் மின்மடல் இதழ்கள் போல உண்டு என்பது ஒரு குறை. அதனாலேயே, ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றத்துக்கும் விவாதத்துக்கும் உதவாத மின்மடல், இணைய சஞ்சிகைகள் என்ற வடிவங்களை விட்டு இணையம் வேறு வடிவங்களைத் தேடிக் கொள்ள ஆரம்பித்தது.

அடுத்து வந்தவை. இணையக் குழுமங்கள். தன் எழுத்தும் கருத்தும் கவனிக்கப்படவும் விவாதிக்கப்படவும் வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு மின் குழுமங்கள் ஒரு வரப்பிரசாதம். மின்குழுமங்களில் எல்லாரும் எழுத்தாளர்களே. எழுத்தாளனும் வாசகனாகிற தளம் அது. வாசகனும் விமர்சகனாகவும் எழுத்தாளனாகவும் உருமாறுகிற தளமும் இதுதான். எழுத்தாளனையும் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்கிற கருத்துகள் வெளியாகிற வாய்ப்புகள் உள்ள இடம். ஆனாலும் இங்கே எழுத்தாளன் ஒரு தளத்திலும் வாசகர் இன்னொரு தளத்திலும் பேசிக் கொண்டிருக்கிற விபத்துகள் நேரிடுவதுண்டு. இது எழுத்தாளர் வாசகருக்கு இடையே மட்டுமில்லாமல், எந்த விவாதத்திலும் ஈடுபடுகிற இருவருக்குமிடையே நேரக்கூடியதுதான் என்பது ஆறுதலான விஷயம். ஆனாலும், அவற்றையெல்லாம் மீறி உடனுக்குடன் வாசக அனுபவங்களை அறிந்து கொள்ளவும், படைப்பூக்கத்தைப் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிற வடிவம் இணையக் குழுமம். ஆனாலும், பலர் பங்கேற்கும் பரந்துபட்ட நேரடி விவாதத்துக்கு வழி கோலும் இணைய குழுமங்களுக்கும் குறை உண்டு. அது என்னவென்றால், குழுமங்களின் மட்டுறுத்துனர்கள் சில நேரங்களில் சர்வ வல்லமை பொருந்திய அவதாரமெடுத்து தாங்கள் விரும்பாதவற்றை அனுமதிப்பதில்லை. மேலும் மின் குழுமங்களில் ஒருவரின் படைப்புகளையும் அவற்றைப் பற்றிய விவாதங்களையும் தொடர்ந்து படிக்க முடியாது. ஒரே நேரத்தில் பல இழைகள் ஓடிக் கொண்டிருக்கும். குழுமத்திற்கென்று ஒரு தனிமுகம் இல்லை. பல முகங்களின் கூட்டுத் தொகுப்பு அது. இவற்றைத் தீர்க்க வந்த அடுத்த விடிவம் வலைப்பதிவு. ஆனாலும், உறுப்பினர்களின் கருத்துகளை மட்டுறுத்தித் தணிக்கை செய்யாத பல இணையக் குழுமங்கள் தமிழில் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டு வருகின்றன. அங்கே மிகவும் அறிவார்ந்த ஆழமான விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன என்பது நாமறிந்த உண்மையுமாகும். விவாதத்துக்கும் கருத்து பரிமாற்றத்துக்கும் மிகச் சிறந்த வடிவம் மின்குழுமங்கள்தான் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்து வந்த வடிவம் - வலைப்பதிவு. இதில் ஒருவர் தான் விரும்பியதைத் தான் விரும்பிய வண்ணம் எழுதிக் கொள்ள முடியும். அதுமட்டுமில்லை, மற்றவர்கள் தாங்கள் விரும்பிய வண்ணம் எதிர்வினைகளைத் தருவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தித் தர முடியும். வலைப்பதிவுகள் தன்னளவில் இணைய சஞ்சிகைகள் போன்றவை. அதன் சிறப்பு - கால வரையறையின்றி வேண்டிய பொழுது பிரசுரமாவதும், உடனுக்குடன் வாசகர்கள் எதிர்வினை தருவதற்கான கருத்துப் பெட்டிகளைத் தருவதும்தான். வலைப்பதிவுகள்தான் எதிர்காலம் என்று நினைக்கிற எழுத்தாளர்களில் வெங்கடேஷின் நண்பர் பா.ராகவனும் உண்டு என்பதைப் பா.ராகவன் வலைப்பதிவைத் தொடர்ந்து படிப்பவர்கள் அறிவர். வலைப்பதிவுகளின் சிறப்பே அவற்றின் தனித்தன்மையும் ஒருவரின் ரசனைகளையும் கருத்தாக்கங்களையும் வெளிப்படுத்தவும், அதைக் குறித்த விவாதத்தில் பங்கேற்று தன்னைக் கூர்படுத்திக் கொள்ளவும் ஏற்ற இடம் என்பதுதான். எஸ்.ராமகிருஷ்ணன் போன்று எழுத்தைத் தீவிரமாக அணுகுபவர்கள் கூட வலைப்பதிவு என்கிற வடிவத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது இணையப் பரிணாம வளர்ச்சியில் வலைப்பதிவின் இன்றைய முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

எனவே, தான் எழுதுவது மட்டுமே முக்கியம். அதைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்வதில் எனக்கு விருப்பமில்லை என்கிற கருத்துடையவர்களுக்கு மின்மடல் இதழ் சிறந்த வடிவம் எனலாம். எந்த எழுத்தும் விவாதிக்கப்படவும் விமர்சிக்கப்படவும் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் மாற்றுக் கருத்துகள் கொள்வது வாசகரின் உரிமை என்று நம்புபவர்களுக்கும் ஏற்ற வடிவம் மின் குழுமங்களும் வலைப்பதிவுகளும். வரலாற்று ரீதியாகப் பார்ப்போமேயானால், எழுத்தாளனுக்குக் கருத்துச் சுதந்திரம் தருகிற அடிப்படை வடிவத்திலிருந்து, அனைவரின் கருத்துகளையும் வெளிப்படுத்த விரும்புகிற உலகளாவிய கருத்துச் சுதந்திர வடிவத்தை நோக்கி இணைய இதழியல் வடிவங்கள் முன்னேறி வந்துள்ளதை அறிய முடிகிறது. தான் எழுதுவதை மற்றவர்கள் படிக்க வேண்டும் என்று நினைக்கிற எந்த எழுத்தாளரும் தன்னைப் பற்றி வாசகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அறிய விழைவதும் இயற்கை. அதற்கு உடனுக்குடன் சுலபமான வழிகளில் சிறப்பாக உதவுவது இத்தகைய நவீன வடிவங்கள்.

"வலைப்பதிவுகளின் வடிவமே அந்நியத் தன்மையோடு இருக்கிறது" என்று வெங்கடேஷ் சொன்னதாக ரமா எழுதியிருக்கிறார். எந்த ஒரு புது வடிவத்த்தையும் எளிதில் ஒத்துக் கொள்ளாத ஒரு மனப்பாங்காகவே இதை நான் காண்கிறேன். இந்த மனப்பான்மை சமூகத்தில் பரவலாக இருப்பதுதான். இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. புதிய வடிவம் தன்னை நிரூபிக்கும்வரை காத்துக் கொண்டிருக்கிற ஜாக்கிரதையுணர்வு என்று இதை நேர்மறையாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். பேனாவிலும் பேப்பரிலும் கடிதங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் மின்னஞ்சல் வந்தபோது, மின்னஞ்சலை குறித்தும் இதே போன்ற கருத்தை வெங்கடேஷ் கொண்டிருந்தாரா என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை வாசகருடன் (எழுத்தின் நோக்கம் வாசகரை அடைவது. அவரின் சிந்தனையைக் கிளறுவது என்றால்) நேரடியாக உறவாடவும் பின்னூட்டங்கள் பெறவும் உதவுகிற நெருக்கமான உரையாடல்களை ஏற்படுத்த உதவுகிற வடிவங்கள் மின் குழுமங்களும் வலைப்பதிவுகளுமே. மாறாக, வாசகர்களை அந்நியத் தன்மை கொள்ள வைக்கிற பழைய வடிவம் மின்மடல் இதழ்கள். ஆகையால், வலைப்பதிவுகளின் வடிவமே அந்நியத் தன்மையோடு இருக்கிறது என்கிற வாதம் என்னளவில் ஏற்றுக் கொள்ளத் தக்கது இல்லை.

வலைப்பதிவுகளில் என்னென்ன பதியப்பட வேண்டும் என்ற விவாதங்கள் நிகழ்ந்து வருவதை வலைப்பதிவு வடிவத்தைத் தேர்ந்தெடுக்காததற்கு ஒரு காரணமாகச் சொல்கிற வெங்கடேஷ்தான், ரமாவின் கட்டுரையில் இன்னொரு இடத்தில் வலைப்பதிவுகள் மினி செய்தித்தாள்களாக மாறி வருகின்றன என்றும் வலைத்தளத்தின் வடிவம் அது என்றும் சொல்கிறார். இது உங்களுக்கு முரண்பாடாகத் தோன்றினால் நான் பொறுப்பில்லை. எந்த வடிவத்திலும் என்ன உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்பது, அந்த வடிவத்தைத் தேர்ந்தெடுப்பவர் நிர்ணயிப்பது என்று நான் நம்புகிறேன். வெங்கடேஷின் மின்மடல் இதழே கூட எனக்குப் பலவிதங்களில் மினி செய்தித்தாள் போலவும், வலைப்பதிவுகளில் உள்ளது போல, கவிதை, கட்டுரை, அலசல் போன்றவற்றை உள்ளடக்கியுமே இருக்கிறது. எனவே, வலைப்பதிவுகளைப் பற்றி அவர் வைத்திருக்கிற இந்த விமர்சனத்தை அவரின் மின்மடல் இதழுக்கும் பொருத்திப் பார்க்க ஒருவரால் முடியும். வெங்கடேஷின் மின்மடல் இதழ் கூட வலைப்பதிவுகள் போலவே ஒருவரின் நம்பிக்கைகளைச் சிந்தனைகளை மட்டுமே முன்வைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் வலைப்பதிவில் வாசகர் உடனுக்குடன் கருத்துச் சொல்லவும், விவாதம் செய்யவும் வழியிருக்கிறது. எதிர்க்கருத்து என்ற பெயரில் தனிப்பட்ட தாக்குதல்கள் நடக்கின்றன என்பது வலைப்பதிவுக்கும் குழுமங்களுக்கும் ஒரு குறைதான். ஆனால் இந்தக் குறை அச்சுப் பத்திரிகையிலிருந்து இணைய சஞ்சிகை வரை தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது. எனவே, இது வலைப்பதிவு, குழுமங்கள் ஆகியவற்றின் குறை மட்டுமில்லை.

"மடலாடற் குழுக்கள் என்பவை ஒரு கட்டத்தில் மிகவும் Impersonal ஆகத் தொடங்கி விட்டது" என்று வெங்கடேஷ் சொல்வதாக ரமா எழுதியிருக்கிறார். இது மடலாடற் குழுக்களின் குறை மட்டுமில்லை. இன்றைக்குத் தமிழில் இருக்கிற இணைய வடிவங்கள் எதிலும் காண்கிற குறைதான். திண்ணை போன்ற பிரபலமான இணைய இதழ்களில் கூட இத்தகைய குறைகளைக் காண முடியும். எந்த ஒரு வடிவமும் அதில் பங்கேற்கிறவர்களின் விரிவாழத்தைப் பொறுத்தே சிறப்பாகவோ மோசமாகவோ அமைய முடியும். பலரும் ஆர்வமுடன் பங்கேற்கும்போது தனித்தன்மையும் நோக்கும் போக்கும் சிலநேரங்களில் மாறிப்போவதும் தொலைந்து போவதும் உண்மைதான். ஆனால், தன் நோக்கம் எது என்று அறிந்த ஒருவர் இவற்றைச் சுலபமாகக் கையாள முடியும். தமிழ்ச் சிறுபத்திரிகையுலகின் ஆழத்தையும் விரிவையும் இன்றைக்குத் தமிழ் இணைய உலகில் எதிர்பார்க்க முடியாது. ஆனால், அந்த ஆழமும் விரிவும் இல்லையென்று எழுதாமலும் இருப்பது சரியில்லை. அப்படி எழுதாமல் இருப்பது, இணையத்தில் இருக்கிற தட்டையான மேம்போக்கான திருப்தியற்ற நிலையே தொடர வழிவகுக்கும். மாறாக, தமிழில் அறிவும் ஆழமும் மிக்க சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் இணையத்தில் நுழைந்து ஒருவழிப்பாதையாக எழுதித் தனக்கான அங்கீகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதோடு நின்று விடாமல், ஆக்கபூர்வமான விவாதங்கள், பங்கேற்புகள் ஆகியவற்றின் மூலம் தன் சுற்றுப் புறத்தின் தரத்தையும் உயர்த்த முடியும். அந்த நம்பிக்கையில்தான் ஜெயமோகன், எஸ்.இராமகிருஷ்ணன், இரா.முருகன் போன்றோர் இணைய உலகிலும் மின்குழுமங்களிலும் (எஸ்.இராமகிருஷ்ணன் மின்குழுமங்களில் பங்கேற்கவில்லை) தீவிரமாகப் பங்கேற்று வந்தனர். வருகின்றனர். வெங்கடேஷிக்கும் அந்த நம்பிக்கை உண்டு என்றே நான் நம்புகிறேன். ஆனால், அவருக்கு மின்மடல் வடிவம் பிடித்திருக்கிறது என்பதற்காக மற்றவற்றை இப்படிச் சரியில்லை என்ற மாதிரி கருத்து சொல்வதாலேயே இதை எழுத வேண்டியிருக்கிறது. தனக்கு மின்னிதழ் வடிவம் பிடித்திருக்கிறது, அதனால் அதைப் பயன்படுத்துகிறேன் என்று வெங்கடேஷ் சொல்லியிருந்தால் நமக்கு மாற்று கருத்தில்லை என்பதையும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

ஒவ்வொரு கருத்துப் பரிமாற்ற வடிவத்துக்கும் குறிப்பிட்ட சிறப்பியல்புகளும் பலவீனங்களும் உண்டு. ஆனாலும் பரிணாம வளர்ச்சி என்பது காலத்துக்கேற்ற தேவைகளைத் தருவது. ரமாவுக்கு இன்றைய உலகிலும் மாடு பூட்டிய கட்டை வண்டியில் போவதுதான் பிடித்திருக்கிறது என்றால் அது அவர் விருப்பம். எனக்கும் மாட்டு வண்டியில் போவது பிடிக்கும்தான். கட்டை வண்டி மனிதனின் பயணத்துக்கு உதவிய முதல் வடிவங்களில் ஒன்று என்கிற மரியாதையும் மதிப்பும் எனக்கும் உண்டு. அதற்காக நவீன போக்குவரத்து வடிவங்களை மாட்டு வண்டியை விட மோசம் என்று நான் சொல்ல முயல மாட்டேன். ஆனால், ரமா முயல்கிறார். அவர் மேற்கோள் காட்டுகிற வெங்கடேஷின் வாசகங்கள் முயல்கின்றன. அதனாலேயே இவ்வளவு விவரமாக எழுத வேண்டியிருந்தது.

பின்குறிப்பு: இது ஒரு முரண்நகையாக இருக்கலாம். ரமாவின் கட்டுரை கடைசியில், வெங்கடேஷின் மின்மடல் இதழ் வலைத்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்று சொல்லி, அதற்கான இணைய முகவரியைத் தருகிறது. :-)
Posted by PKS at 3:11 PM

இணையத் தமிழின் எதிர்காலம்

ஓரிரு எண்ணங்கள் இணையத் தமிழின் எதிர்காலம் இணையவலையில் முதன் முதல் 1996-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நுழைந்த இந்திய மொழி தமிழ் என்று சொல்கிறார்கள், உண்மையாக இருக்கலாம். இதற்கு முக்கியமான காரணம் வெளிநாட்டுத் தமிழர்கள், 1986-லேயே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். மெல்ல மெல்ல பின் தள்ளிக் கொண்டு இன்டர்நெட் கண்டுபிடிப்பதற்கு முன்பிருந்தே தமிழ், இணையத்தில் பயன்பட்டது என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை. ஆனால் இதில் முக்கியமானது இணையத்தில் மிக முன்னேற்றமடைந்திருந்த சிங்கப்பூர், கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் தாய்மொழி ஆர்வமும், அதேபோல் அமெரிக்காவில் பிழைக்கச் சென்ற மென்பொருளாளர்களின் தமிழ் ஆர்வமும்தான். அவர்கள் அங்கே போனதும் தமிழுக்கு உருப்படியாக எதாவது செய்தே ஆகவேண்டும் அதைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்று தீர்மானித்து, சும்மா இருந்த சங்கை ஓய்வு நேரத்தில் எல்லோரும் ஊதி தமிழை இணையத்தில் உள்ளிட்டு உன்னதப்படுத்திக் கொண்டிருந்தார்கள். முதலில் தமிழே பேசாத தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் மென்பொருள்களை எழுதினார்கள். இந்தப் பணியைச் சீரமைக்க எந்த இயக்கமும் இல்லாததால் பெரும்பாலும் இவர்கள் செய்ததெல்லாம் விரயமாகவே போயிற்று என்று சொல்லலாம். இதில் முன்னோடிகள் என்று சொல்ல வேண்டியவர்கள் கனடாவைச் சேர்ந்த ஸ்ரீனிவாசனின் ஆதமி, சிங்கப்பூர் நா. கோவிந்தசுவாமி, மலேசியாவின் முத்தெழிலன், சுவிஸ்நாட்டைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் ஆவர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பென்லங்வேஜ் செண்டரின் டாக்டர் ஷிப்மன், டாக்டர் ரங்கநாதன் - இவர்களின் பணியும் சிறப்பானது. தமிழ் கற்றுத் தரும் தளங்களில் பென் சிறந்தது. தமிழின் உள் குறியீடுகளிலும் அதன் விசைப்பலகையிலும் தரக்கட்டுப்பாடு இல்லாததால் அவரவர் தமதமது அறிவறி வகை தமிழைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். தமிழைக் காப்பாற்ற இத்தனை வழிகளா என்று வியப்படையும் அளவுக்கு அத்தனை ஆர்வலர்களும் மென்பொருளாளர்களும் ஆளாளுக்கு இஷ்டத்துக்கு இந்தக் காரியத்தைச் செய்து, இந்தப் பணி அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் பிடிவாதங்களும் அதிகரிக்க 'நான் காப்பாற்றினதுதான் சரியான காப்பாற்றல், நீ காப்பாற்றினது தப்பு' என்கிற தொன்றுதொட்ட தமிழ் ஒற்றுமையைக் காட்டினதில் இந்திய மொழிகளிலேயே அதிக அளவில் உள் குறியீடுகள் தமிழில்தான் உள்ளது என்கிற சந்தேகத்துக்குரிய பெருமையையும் நம் மொழி பெற்றது. மற்ற இந்திய மொழிகள் இதற்கெல்லாம் நேர விரயம் செய்யாமல் மைய அரசின் அஸ்கி குறியீட்டை நேரடியாக ஏற்றுக்கொண்டார்கள். தமிழில் அவ்வளவு சுலபத்தில் அது நடக்கவில்லை. இன்று ஆல்ட்டாவிஸ்டாவில் தமிழ் என்று உள்ளிட்டு தேடினால் 4,82,918 பொருத்தங்கள் தென்படும். இவைகளில் எத்தனை வெறும் பக்கங்களாக இல்லாமல் முழு இணையத் தளங்கள் என்றால் 310 தேறுகிறது. அவைகளில் இணைய இதழ்கள் 23, தமிழ் கற்றுக்கொடுக்கும் தளங்கள் 6, திருக்குறளுக்கு 5, மின் நூலகங்கள் 4, ஆய்வுகள் 3, அகராதிகள் 5, அரசியல் கட்சிகள் 5, ஊர்களுக்கான இணைய தளங்கள் 42, இணைய வானொலிகள் 12, இணைய மாநாடுகள் 3, இணையத் தொகுப்பாளர்கள் 10, தமிழக அரசு 18, இலக்கிய ஆராய்ச்சி 18, கர்நாடக இசை, தமிழிசை, பரதநாட்டியம் 22, திரைப்படப் பாடல்கள் திரை உலகு சார்ந்த தளங்கள் 106. மற்றவை எல்லாம் தனிப்பட்ட தமிழ் ஆர்வலர்களின் சோகையான அரை மனதான முயற்சிகள். இவைகளை ஆராய்வது ஒரு நல்ல பொழுதுபோக்கு. தமிழக அரசு கொஞ்சம் தாமதமாக விழித்துக் கொண்டு குறியீடுகளையும் விசைப்பலகையையும் தர நிர்ணயம் செய்யத் தீர்மானித்தது. மூன்று தமிழ் இணைய மாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட, மிகுந்த விவாதங்களுக்குப் பிறகு TAM, TAB என்ற இரண்டு குறியீடுகளையும் இரண்டு விசைப்பலகை ஒதுக்கீடுகளையும் தர நிர்ணயம் செய்தார்கள். இதையும் வெளிநாட்டுத் தமிழர்கள் தயக்கத்துடன் ஒப்புக்கொள்ளலாமா, இல்லை தாங்கள் கண்டுபிடித்த டிஸ்கிதான், மயிலை போன்றவைதான் உசத்தியா என்று குழப்படியில் இருக்கிறார்கள். பெரும்பாலான தமிழர்கள் அதிக அளவில் பயன்படுத்த இரண்டு குறியீடுகளையும் இரண்டு விசைப்பலகை ஒதுக்கீடுகளையும் இறுகிய முகத்துடன் ஒப்புக் கொண்¢டிருக்கிறார்கள். இந்த நிலையையாவது அடைவதற்கு இந்த மேடையில் வீற்றிருக்கும் டாக்டர் ஆனந்தகிருஷ்ணனின் பங்கேற்பு கணிசமானது. இதற்குள் டெக்னாலஜி முன்னேற்றமடைந்து இந்தச் சண்டைகள் எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது. டைனமிக் ஃபான்ட்ஸ் என்னும் வசதி வந்தது. தமிழ் இணையத் தளத்தைத் திறந்த உடன் தமிழைப் பார்க்க முடிகிறது. ஆரம்ப கட்டங்களில் தமிழ் எழுத்துகளுக்கான s ஐ முதலில் அந்தந்த இணையத் தளத்திலிருந்து ஒரு முறை இறக்குமதி செய்து வைத்துக் கொள்ளத் தேவையிருந்தது. இப்போது தேவை நீங்கிவிட்டது. இணையத்தில் தமிழைப் பார்க்க, படிக்க இறக்குமதி தேவையில்லை. இணையத்தில் தமிழை உள்ளிடத்தான் தர ஒற்றுமை வேண்டும் என்கிற நிலைக்கு வந்திருக்கிறது. இது ஒரு முன்னேற்றம்தான். தமிழ் இனி தங்கு தடையின்றி எந்த வடிவத்தில் கிடைத்தாலும் நம் வடிவத்துக்கு மாற்றிக் கொள்ளும் மென்பொருள் வசதியும் ஏற்பட்டிருக்கிறது. யூனிகோடு என்னும் சர்வதேச குறியீட்டுத் தரம் வந்ததும் ஓரளவுக்கு ஒருங்கமைப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை டிஸ்கி, அஞ்சல், பதமி, மயிலை, இ.ன்ஸ்க்ரிப்ட் என்று அங்கங்கே வட்டார வழக்குகளாக இணையத்தில் இருந்தாலும் தமிழக அரசின் டாம் (TAM) டாப்தான் (TAB) பெரும்பான்மை பயனீட்டில் வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையை நான் குறை கூறவில்லை. டெக்னாலஜி மொழி உணர்ச்சியற்றது. உங்களுக்கு ஆறு தமிழ் வேண்டுமா ஆறும் தருகிறேன் என்று சொல்லும். உங்கள் பொன்னான நேரத்தை விரயம் செய்யுங்கள், பரவாயில்லை என்றால். ஆரம்பத்தில் எல்லா தமிழ்ப் பத்திரிகைகளும் தங்கள் பத்திரிகையில் ஏற்கெனவே உள்ளிட்ட சங்கதிகளை இணையத்தில் காட்டிட, அவரவர் இஷ்டத்துக்கு ஃபாண்ட் அமைத்தார்கள். அந்த நிலை மாறிவிட்டது. இணையத்தில் hit rate எண்ணிக்கைகளைக் கண்டு புளகாங்கிதம் அடைந்து, இதில் வியாபாரம் நடத்திக் காசு கொழிக்கலாம் என்ற ஆசையில் டாட் காம் கம்பெனிகளின் ஆரம்ப உற்சாகத்தால் எல்லோரும் ஈர்க்கப்பட்டு பெரிதாக முதல¦டு செய்து, விளம்பரம் பிரமாதமாக செய்து இணைய இதழ்களும் தளங்களும் துவங்கி, பளபளவென்று ஏசி அலுவலகங்கள் அமைத்து, இதுவரை தமிழ் எழுத்தாளர்கள் எதிர்பார்த்திராத அபத்தமான சம்பளங்கள் எல்லாம் கொடுத்து தடாலடியாக புறப்பட்டார்கள். சுமார் நூறு இணைய தளங்களும் பத்திரிகைகளும் இப்படிப் பிறந்தன. நாளடைவில் இதில் சில்லரை இல்லை, தமிழர்கள் இலவசமாக கொடுத்தால்தான் எதையும் படிப்பார்கள், காசு கேட்டால் கழன்று கொள்¢வார்கள் என்கிற யதார்த்தம் புலப்பட பல தளங்கள் தங்கள் கடை பரப்பலை நிறுத்திக் கொண்டுவிட இன்றைக்கு தமிழ் இணைய இதழ்கள் 23 இருப்பதாகத் தெரிகிறது. அவைகளில் தீவிரமாக இயங்குவது பத்துப் பதினைந்து. இவை நான்கு வகைப்படுகின்றன. 1. அம்பலம்போல இணையத்திற்கென்றே தனிப்பட்டு நடத்தப்படும் மின் இதழ்கள். ஆறாம்திணை, இன்தாம், sify.com போன்றவை உதாரணங்கள். 2. தினபூமி, தினமணி, விகடன், குமுதம் போன்ற சம்பிரதாய பத்திரிகைகளின் இணைய அவதாரங்கள். இவைகள் பெரும்பாலும் அந்த வார, தினப் பத்திரிகைகளில் வருவதை அப்படியே திருப்புகிறார்கள். உள்ளடக்கத்துக்கு பஞ்சமில்லாததால் ஏற்கெனவே உள்ளிட்டதை இணையத்தில் மீண்டும் அபரிமிதமாகத் தருவதில், அவர்களுக்கு சிரமம் இருப்பதில்லை. இது ஓசியில் கிடைப்பதால் வெளிநாட்டுத் தமிழர்கள் அதிகம் பேர் பார்ப்பதால் இவைகளுக்கு hit rate மிக அதிகமாக இருக்கிறது. இது ஒரு மாயை. இவைகளுக்கு காசு கேட்டால் இந்த hit rate சரேல் என்று குறைந்து விடுகிறது. மூன்றாவது வகை niche pages என்று சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட இயலில் மட்டும் தகவல்களைத் தரும் தளங்கள். வேலைவாய்ப்பு, தமிழ்இசை, நூலகம், மருத்துவம், தமிழ்ப் பெயர்கள், ஜோசியம், தேடியந்திரம், பொங்கல் வாழ்த்துகள் - இப்படியான தளங்கள். களஞ்சியம் போன்ற நூலகங்கள், இசை, குழந்தை வளர்ப்பு, கல்யாணம், சமையல் குறிப்பு போன்ற ஒரு தனிப்பட்ட இணையத் தளங்கள். தமிழ்ச் சமுதாயத்தின், தமிழனின் தின வாழ்வையும் மன வாழ்வையும் எந்த அளவுக்கு சினிமா ஆக்கிரமிக்கிறதோ அதே அளவில் இணையத்திலும் சினிமாதான் பிரதானமாக இருக்கிறது. அத்தனை நடிகர்களின் வாழ்க்கை வரலாறுகளும் அவர்களுக்கு நடைபெற்ற பைல்ஸ் ஆப்ரேஷன் வரை விவரமாக கொடுக்கப்படுகின்றன. ஏ.ஆர். ரஹ்மானின் அத்தனை மெட்டுகளையும் காப்பிரைட் கவலையின்றி கேட்கலாம். இவைகளையெல்லாம் கவனிக்கும்போது பொதுவான ஒரு வடிவம் வெளிப்படுகிறது. தமிழ் இணைய பத்திரிகைகளும் சம்பிரதாயமான தமிழ்ப் பத்திரிகைகளின் அமைப்புடன் கொஞ்சம் ஆடியோ விடியோ கலந்து இருக்கின்றன. இணையத்தின் சாத்தியங்கள் அனைத்தையும் பயன்படுத்த இதுவரை தவறிவிட்டதாகத்தான் தெரிகிறது. இணையத்தின் சாத்தியங்கள் என்ன என்ன? இணையத்தில் உடனடியாக வாசகருடன் பேச முடியும். அவர் எழுதுவதை திருத்த முடியும். அனுப்பியதை அங்கீகரிக்கவோ நிராகரிக்கவோ முடியும். படம் வரைவது, கவிதை, கட்டுரை, பேச்சு, பாட்டு - அவருடைய எந்தத் திறமையையும் இணையம் மூலம் கவனிக்க முடியும். இதன் ஆரம்ப நிலையாக நான் சனிக்கிழமை அம்பலத்தில் நடத்தும் சாட் இந்தப் புதிய சாத்தியக்கூறை கோடி காட்டுகிறது. ஆஸ்திரேலியாவிலிருந்தோ ஐதராபாதிலிருந்தோ ஒருவர் அனுப்பும் ஹைக்கூவை நான் இங்கிருந்து கவனித்து அதைப் பற்றி என் கருத்தை உடனடியாக சொல்ல முடிகிறது. இது இணைய இதழின் அடுத்தக் கட்ட சாத்தியம். அவர்கள் வரையும் படங்களை உடனுக்குடன் பார்க்க முடியும். திருத்தி வரையச் சொல்லலாம். அல்லது அவர்கள் பாடினாலும் கேட்கலாம். வாசக - ஆசிரியக் கருத்துப் பரிமாற்றத்தின் பரிமாணங்கள் விரிவாகின்றன. ஒரு கடிதமோ, கேள்வி - பதிலோ தபாலில் அனுப்பி அது ஆசிரியர் மேசைக்குப்போய் அவர் அதை அங்கீகரித்து - அதெல்லாம் இல்லாமல் உடனடியாக பதினைந்து நிமிஷத்தில் ஒரு படைப்பை உலகுக்கு தெரிவிக்க முடியும். இந்தச் சாத்தியத்தின் முழு பாதிப்பை நினைக்கவே வசீகரமாக இருக்கிறது. பத்திரிகையில் வாரம்தோறும் தினந்தோறும் இல்லாமல் கணந்தோறும் வியப்புகள் மாறலாம். 'IN THE FUTURE EVERY ONE WILL BE FAMOUS FOR FIFTEEN MINUTES' என்று ஆண்டி வார்ஹால் சொன்னதை இணைய இதழ்கள் மெய்ப்பிக்கப் போகின்றன. இதன் நன்மைகள் ஏராளம். எனினும் சில தீமைகளும் உள்ளன. கவிதை, கதை படைப்புகளின் தற்காலிகத் தன்மை அதிகரிக்கும். ஆனால் அதே சமயத்தில் அவைகளின் சாசுவதமும் இணையத்தில் அதிகரிக்கும். உதாரணமாக இதுவரை அம்பலத்தில் இரண்டு ஆண்டுகளாக உள்ளிட்ட அத்தனை விஷயங்களும் ARCHIVING என்று இந்தத் தளத்தின் நினைவகங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதைக் கேள்விகள் கேட்டு ஆராய்ச்சிக்கோ அல்லது சமயம் கிடைக்கும்போது படிப்பதற்கோ கொண்டு வர இயலுகிறது. இதனால் அவசர உலகம், நிதான உலகம் இரண்டிற்கும் இணையம் ஈடு கொடுக்கிறது. தமிழின் இரண்டாயிரம் ஆண்டு இலக்கியங்கள் அனைத்தையும் இதுவரை வந்துள்ள ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொரு எழுத்தையும் உள்ளிட ஒரு சிறிய அறை நிறைந்த வட்டுகள் போதும் எனும்போது பிரமிப்பாக இருக்கிறது. தமிழில் இதுவரை எழுதியது இனி எழுதுவது எதுவும் சாகாது. உலகில் எங்காவது ஓர் இணையத் தளத்தில் எதாவது ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருக்கும். இதனால் உலகளாவிய ஒரு ராட்சச தேடியந்திர மென்பொருள் அமைத்து அதில், 'தமிழ் உலகில் எங்கிருந்தாலும் கொண்டு வா' என்கிற ஒரு கட்டளை கொடுக்கும் அளவுக்கு டெக்னாலஜி முன்னேறியிருக்கிறது. எதிர்காலத்தில் மனத்தில் உள்ள எண்ணங்களை எதாவது ஒரு வடிவத்தில் வெளிப்படுத்தினால் அது சாசுவதம் பெற்றுவிடும். அதை நீக்கவே முடியாது என்று தோன்றுகிறது. எனவே இனி ரகசியம் என்று கேளா கானங்களாக, எழுதாத கவிதைகளாக, வரையாத சித்திரங்களாகத்தான் இருக்கும். மற்றவை எல்லாமே உலகுக்குச் சொந்தமாகிவிடும். இதனால் ஏற்படும் அந்தரங்க இழப்பை இப்போது யாரும் எண்ணிப் பார்க்க நேரமில்லை. 'எதிர்காலத்தின் ஒரே ஒரு சிறப்பு அது ஒவ்வொரு நாளாக வருவதுதான்' என்று Acheson சொன்னார், நல்ல வேளை. (அம்பலம் 2-ம் ஆண்டு விழா மற்றும் மலர் வெளியீட்டு விழாவில் எழுதி வழங்கிய கட்டுரை)

w பதில்கள் w புறநானூறு

Thursday, January 17, 2008

தமிழ் வலை திரட்டி

தமிழ்மணம் தகவல் களஞ்சியம்

தேன்கூடு - வலைப்பூ


சென்னபட்டினம்

தமிழ் பதிவுகள்


மாற்று

வலைபூக்கள்






‍எனது தமிழ் வலைபூக்கள்







திருவண்ணாமலை


பெண்கள்

பொருள் செய்ய விரும்பு


பத்ரின் பதிவுகள்

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ?

இளம் ஹீரோ பால பாரதி தலைவன்


அருணை ஒளி

தமிழ் இணைய தளங்கள்

உங்கள் விருப்பம்


தமிழ் இணைய தளங்கள்








தமிழ் இதழ்கள்






கீற்று

அர்ச்சுனா

தமிழர் கண்ணோட்டம்


தென்செய்தி

விகடன்

திண்ணை


நக்கீரன்

குமுதம்

தமிழ் சி.பி


காலச்சுவடு

வெப் உலகம்

பதிவுகள்


தமிழ் .காம்

உண்மை

தமிழம்.நெட்


இளமை

மரத்தடி

அப்பால் தமிழ்


கூடல்

வார்ப்பு

நெய்தல்


அப்புசாமி

கல்கி

குவியம்


நட்கீரன்

கொல்டன் தமிழ்

நெட் தமிழ்


சென்னை நெட்வொர்க்

முரசம்







உலகத் தமிழர் செய்திகள்







உலகத் தமிழர் செய்திகள்

உலகத் தமிழர் இணையம்

உலகசந்தை



தமிழ் நாதம்

நாளாந்த தமிழ் செய்திகள்

தமிழ் நெட்



புதினம் செய்திகள்

ஈழமுரசு

வீரகேசரி



தினக்குரல்

தமிழ் ஈழ செய்திகள்

உதயன்



தமிழ்நேசன்

முழக்கம்

வணக்கம் மலேசியா



தமிழ் கனேடிய செய்திகள்

தமிழ் பிரித்தானிய செய்திகள்

சங்கம்



மைக்ரோசாப்ட் செய்திகள்

தமிழ் ஆஸ்திரேலியன்

குளோப் அன்ட் மெயில்



தமிழ் கார்டியன்

டோரண்ட்டோ தமிழ்

பாரீஸ் தமிழ்


தமிழ் குடில்